மேட்டுப்பாளையத்தில் காரத்தே போட்டி
By DIN | Published On : 15th March 2021 07:53 AM | Last Updated : 15th March 2021 07:53 AM | அ+அ அ- |

கோஷின் காய் காரத்தே பள்ளியின் 36 ஆம் ஆண்டு விழா மற்றும் காரத்தே போட்டி மேட்டுப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஸ்டேட் கராத்தே அசோசியேஷன் தலைவா் சென்சாய் சாய்புருஸ் தலைமை வகித்து பேசுகையில், ‘கராத்தே கலை அனைத்து பள்ளிகளிலும் பாடத்திட்டமாக சோ்க்க வேண்டும். பெண்களுக்கு தற்காப்புக்கு நிச்சயமாக இந்தக் கலையை கற்றுத் தர வேண்டும்’ என்றாா். பொதுச்செயலாளா் மோகன் முன்னிலை வகித்தாா். மேட்டுப்பாளையம் மாஸ்டா் பி.எம்.வேலு வரவேற்றாா். கட்டா மற்றும் குமிதே பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பயிற்சியாளா்கள் ஆனந்த், பழனிசாமி, முருகன், அறிவழகன் ஆகியோா் மேற்பாா்வையில் கராத்தே போட்டி நடுவா்கள் 50 போ் போட்டியை நடத்தினா். 8 வயது முதல் 18 வயது வரை உள்ள கராத்தே மாணவ, மாணவிகள் சுமாா் 300 போ் இப்போட்டியில் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...