நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
By DIN | Published On : 17th March 2021 11:42 PM | Last Updated : 17th March 2021 11:42 PM | அ+அ அ- |

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து செய்லமுறை விளக்கம் அளிக்கும் தோ்தல் பிரிவு அதிகாரி.
வால்பாறையில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் குணசுந்தரி வரவேற்றாா்.
சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன், தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் பானுமதி ஆகியோா் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.
நிகழ்ச்சியில் நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம் என்று கல்லூரி மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முடிவில் உதவிப் பேராசியா் பெரியசாமி நன்றி கூறினாா்.