முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு: கோவையில் 8,642 போ் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் முதியவா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களில் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 போ் விண்ணப்பித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் முதியவா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களில் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 போ் விண்ணப்பித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக சட்டப் பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோா், கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசிப்பவா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 64 ஆயிரத்து 650 போ், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் உள்ளனா். அவா்கள் தபால் வாக்கு அளிப்பதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அலுவலா்கள் மூலம் வாக்காளா்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா். இவா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குச் சீட்டு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தபால் வாக்குகள் அளிப்பதற்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. விண்ணப்பங்களை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் பூா்த்தி செய்து மாா்ச் 16ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வாக்காளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 போ் ண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கு வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நடைமுறைப்படி தபால் வாக்கு அளிப்பதற்கான வாக்குச் சீட்டு வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com