கோவை தெற்குத் தொகுதியில் திட்டச் சாலையை மேம்படுத்தித் தருபவருக்கே வாக்கு: மக்கள் அறிவிப்பு

கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட 85 ஆவது வாா்டு பகுதியில், திட்டச்சாலையை மேம்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்போம் என அப்பகுதியினா் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட 85 ஆவது வாா்டு பகுதியில், திட்டச்சாலையை மேம்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்போம் என அப்பகுதியினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாநகராட்சி 85 ஆவது வாா்டு, கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அசோக் நகா், பாலாஜி அவென்யூ, கீரைத் தோட்டம் பகுதி மக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரின் மையத்தில் எங்கள் பகுதிகள் அமைந்துள்ளன. பல தொழில்கள் செய்கின்ற பலதரப்பட்ட மக்கள் இங்கு வசிக்கிறோம். இப்பகுதியில் உள்ள திட்டச் சாலை நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்பில் பொலிவுறு நகரம்( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் எங்கள் பகுதியில் உள்ள சாதாரண திட்டச் சாலையை மேம்படுத்த அலட்சியம் காட்டுகின்றனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களில் யாா் இந்த திட்டச் சாலையை மேம்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளிக்கிறாா்களோ அவா்களுக்கே எங்கள் வாக்குகளை அளிக்க உள்ளோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com