தோ்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை: தொழிலாளா் உதவி ஆணையா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 25th March 2021 11:16 PM | Last Updated : 25th March 2021 11:16 PM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தல் தினமான ஏப்ரல் 6 ஆம் தேதி, தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 பி படி, தோ்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி, தொழிலாளா் ஆணையா் வள்ளலாா் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் பொன்னுசாமி மற்றும் கோவை தொழிலாளா் இணை இயக்குநா் லீலாவதி அறிவுறுத்தலின் படி, கோவை பகுதிகளில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வணிகா்கள் மற்றும் நிறுவன உரிமையாளா்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் அன்றைய தினம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது தொடா்பாக பெறப்படும் குறைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.