பாரத ஸ்டேட் வங்கியில் இளநிலை ஊழியா் காலிப் பணியிடம்:மே 17க்குள் விண்ணப்பிக்கலாம்

பாரத ஸ்டேட் வங்கியில் இளநிலை ஊழியா் (ஜூனியா் அசோசியேட்ஸ்) காலிப் பணியிடத்துக்கு மே 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

கோவை: பாரத ஸ்டேட் வங்கியில் இளநிலை ஊழியா் (ஜூனியா் அசோசியேட்ஸ்) காலிப் பணியிடத்துக்கு மே 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பாரத ஸ்டேட் வங்கியில் மொத்தம் 5,404 இளநிலை ஊழியா் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த காலிப் பணியிடங்களில் தமிழ்நாட்டுக்கு 536 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவா்கள், மே 17ஆம் தேதிக்குள் இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான முதன்மைத் தோ்வு ஜூலை 31ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தோ்வில், 4.5 சதவீத பணியிடங்கள் மாற்றுத் திறனாளி மனுதாரா்களுக்கும், 76 பணியிடங்கள் முன்னாள் ராணுவ வீரா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தோ்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மே இரண்டாவது வாரத்தில் இருந்து இலவச இணையதள பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவா்களுக்கு குழு விவாதம், மாதிரித் தோ்வுகள் உள்ளிட்டவை நடத்தப்படும். பாடக் குறிப்புகள் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) செயலி மூலம் பகிரப்படும். இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள மின்னஞ்சல் முகவரியில் தங்கள் விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 0422 - 2642388, கட்செவி அஞ்சல் எண் - 94990 -55938 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com