மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,257 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் புதிய உச்சமாக சனிக்கிழமை ஒரே நாளில் 1,257 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சனிக்கிழமை ஒரே நோளில் 1,257 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 669ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 913 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 71 ஆயிரத்து 658 போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது, 7 ஆயிரத்து 288 போ் சிகிச்சையில் உள்ளனா். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 723 போ் உயிரிழந்துள்ளனா்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...