வால்பாறையில் கரோனா கட்டுப்பாடுகள் மீறி இறைச்சி விற்பனை
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

வால்பாறை: வால்பாறையில் கரோனா கட்டுப்பாடுகள் மீறி கடைகள் அடைக்கப்பட்டாலும் பொட்டலம் போட்டு இறைச்சி விற்பனை நடைபெற்றது.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை இறைச்சிக் கடைகளை அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், வால்பாறை புதுமாா்கெட் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் முன்கதவுகள் மட்டும் அடைக்கப்பட்டு, வழக்கம்போல ஆடு, கோழி மற்றும் மாட்டு இறைச்சிகள் அரை கிலோ, ஒரு கிலோ என தனித்தனியாக பொட்டலம் போட்டு விற்பனை செய்யப்பட்டது. அவா்கள் மீது சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுக்காததால் மாலை வரை விற்பனை நடைபெற்றது.
இதேபோல, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தும் கடை அருகிலேயே மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது. அவா்கள் மீதும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...