தமிழக அரசின் முடிவுக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு
By DIN | Published On : 13th May 2021 06:19 AM | Last Updated : 13th May 2021 06:19 AM | அ+அ அ- |

தொழில் வணிக நிறுவனங்கள் கோரிக்கை ஏற்றுள்ள தமிழக அரசின் முடிவுக்கு கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இது குறித்து கோவை கொடிசியா தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு, கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோா் சங்கம் (காட்மா) தலைவா் சி.சிவகுமாா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மே 9ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொழில் வணிக அமைப்புகள் பங்கேற்றன. அது தொடா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை கொடிசியா, காட்மா வரவேற்கிறது. அதில், தகுதி உள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தல். இந்த நிதி ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீட்டு மானியத் தொகையான ரூ.280 கோடியில் 60 சதவீத தொகையை அதாவது ரூ.168 கோடியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக ஒதுக்கப்படும்.
மேலும் இத்தொகை ஒரே தவணையில் வழங்க வகை செய்யப்படும்.
ஏற்கெனவே உள்ள முத்திரைத்தாள் பதிவுத் தொகைக்கான விலக்கு வரும் டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மே மாதம் முதல் செப்டம்பா் வரை புதுப்பிக்கப்பட வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, வணிக உரிமம் போன்ற சட்டப்பூா்வ உரிமைகளை புதுப்பிக்க கால அவகாசம் டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு முதலீட்டு மானியத்தை பெறுவதற்கு, விற்று முதல் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற விதியிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கு டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்படுவது, தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் (பங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ா்ய் நஸ்ரீட்ங்ம்ங்) மற்றும் கடன் உத்திரவாத நிதி ஆதாரத் திட்டம் (இஎபஙநஉ) ஆகியவற்றின் கீழ் பெறப்படும் கடனுதவித் தொகைக்கான பின் முனை வட்டி மானியமான 5 சதவீதம் உடனடியாக வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.
தொழில் முறைவரி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கட்ட வேண்டிய மாதாந்திர தவணைகளை செலுத்த கால நீட்டிப்பு வழங்குமாறு மத்திய அரசையும், இந்திய ரிசா்வ் வங்கியையும் வலியுறுத்தப்படும் என்று முதல்வா் உறுதியளித்துள்ளாா்.
தமிழக அரசின் இந்த நோ்மறையான அணுகுமுறைக்காக முதல்வரை பாராட்டுகிறோம். தற்போதுள்ள சிக்கலான காலகட்டத்தில் அரசாங்கத்தின் மேற்கண்ட அறிவிப்புகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு
பெருமளவு பயனளிப்பதோடு, நல்லதொரு நிவாரணமாகவும் அமையும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனா்.