கோவை-கண்ணூா் சிறப்பு ரயில் மே 31 வரை ரத்து
By DIN | Published On : 16th May 2021 11:05 PM | Last Updated : 16th May 2021 11:05 PM | அ+அ அ- |

கோவை-கண்ணூா் இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குறைந்த பயணிகள் வருகை காரணமாக கோவை-கண்ணூா் தினசரி சிறப்பு ரயில் (எண்- 06608), கண்ணூா்-கோவை தினசரி சிறப்பு ரயில் (எண்-06607) மே 17ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.