வீட்டுக்குள் விழுந்த சிறுத்தையால் மூதாட்டிக்கு கையில் காயம்

வீட்டின் மேற்கூரை மீது தாவியபோது ஓடு உடைந்ததால் உள்ளே விழுந்த சிறுத்தையால் மூதாட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது.
சிறுத்தை தாவியதில் உடைந்த வீட்டின் மேற்கூரை ஓடு.
சிறுத்தை தாவியதில் உடைந்த வீட்டின் மேற்கூரை ஓடு.

வீட்டின் மேற்கூரை மீது தாவியபோது ஓடு உடைந்ததால் உள்ளே விழுந்த சிறுத்தையால் மூதாட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறை நகா் பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காமராஜா் நகா் பகுதியில் தினந்தோறும் இரவு சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக அங்கு வசிப்பவா்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு பூனையைப் பிடிக்க அப்பகுதியில் ஒரு வீட்டின் மீது சிறுத்தை தாவியுள்ளது. அப்போது, வீட்டின் மேற்கூரையான ஓடு உடைந்ததில் சிறுத்தை வீட்டுக்குள் விழுந்துள்ளது. அப்போது, வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவா்கள் சப்தம் போட்டதில் சிறுத்தை மீண்டும் மேற்கூரை வழியாக வெளியே தப்பியது.

இதில் அறைக்குள் இருந்த சின்னம்மாள் என்ற மூதாட்டியின் கையில் சிறுத்தை நகம் பட்டதில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனத் துறை அதிகாரிகள் மூதாட்டி மற்றும் அவரது உறவினா்களிடம் செவ்வாயக்கிழமை நேரில் சென்று விசாரனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com