மது விற்பனை: ஒருவா் கைது
By DIN | Published On : 01st November 2021 12:05 AM | Last Updated : 01st November 2021 12:05 AM | அ+அ அ- |

வால்பாறை பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் கற்பகம் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேநீா் கடையில் சோதனையிட்டபோது, அங்கு 55 மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளா் ராஜாமணியை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 55 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.