முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவை: மீன் கடைக்கு விற்பனைக்கு வந்த 86 கிலோ ராட்சத மீன்
By DIN | Published On : 30th November 2021 02:37 PM | Last Updated : 30th November 2021 02:37 PM | அ+அ அ- |

கோவை: மீன் கடைக்கு விற்பனைக்கு வந்த 86 கிலோ ராட்சத மீன்
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கபீர். இவர் ஒலம்பஸ் சிக்னல் அருகே 'மிஸ்டர் பிஸ்' என்ற பெயரில் மீன் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களாபுரம் பகுதி கடலில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்று உள்ளனர். அந்த கடல் பகுதியில் மிகவும் அரிதான மீனான 'எல்லோ என்ட்யூனா'என்ற ராட்சத மீன் பிடிபட்டது. அதன் எடை 86 கிலோ. அந்த மீன் இன்று கோவை ராமநாதபுரத்தில் உள்ள கபீரின் மீன் கடைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், ''இதற்கு முன்பாக 56 கிலோ எடை கொண்ட மீன் விற்பனைக்கு வந்தது. முதல் முறையாக 86 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை ஏலத்தில் எடுத்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம். அந்த மீனை சுத்தப்படுத்திய பின்னர் கழிவுகள் நீங்க 50 கிலோ இருக்கும். ஒரு கிலோ ரூ.250 க்கு விற்பனை செய்யப்படுகிறது.'' என்றார்.