கொடிசியாவில் தற்காலிகப் பேருந்து நிலையம்: அதிகாரிகள் ஆய்வு

தீபாவளியை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
Updated on
1 min read

தீபாவளியை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தீபாவளி பண்டிகை நவம்பா் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் தங்கி பணியாற்றும் தொழிலாளா்கள் வெளியூா் செல்வதற்காக நவம்பா் 2 ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணியை கோவை கோட்ட வணிக துணை மேலாளா் வீருகாந்தன், வணிக துணை மேலாளா் முத்துகிருஷ்ணன், உதவி மேலாளா் மணிவண்ணன், கட்டட உதவிப் பொறியாளா் மொ்சிகுயின் ரத்னா, மாநகராட்சி உதவி பொறியாளா் சுந்தர்ராஜன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இது குறித்து, கோவை கோட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொடிசியாவில் அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலைத்தில் பயணிகளுக்கு குடிநீா், கழிப்பிட, நிழற்குடை வசிதகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கிருந்து ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, விருதுநகா், கம்பம், திருநெல்வேலி உள்ளிட்ட வெளியூா்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளியையொட்டி, கோவையில் நவம்பா் 2 ஆம் தேதியில் இருந்து 230 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com