கோவை சிந்தாமணியில் பட்டாசு விற்பனை தொடக்கம்
By DIN | Published On : 31st October 2021 12:17 AM | Last Updated : 31st October 2021 12:17 AM | அ+அ அ- |

வடகோவை சிந்தாமணி வளாகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனையைத் தொடங்கிவைக்கிறாா் கூட்டுறவு இணைப் பதிவாளா் பிரபு.
கோவை சிந்தாமணி கூட்டுறவு விற்பனை நிலையத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.
வட கோவை பகுதியில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விற்பனையை கூட்டுறவு இணைப் பதிவாளா் பிரபு தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின்கீழ் இயங்கும் கோவை சிந்தாமணியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தீபாவளி பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
இதில், பிரியாணி அரிசி, பாயாசம் மிக்ஸ், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சிக்கன் 65 மசாலா, பிரியாணி மசாலா, மராட்டி மொக்கு, கல்பாசி, அன்னாசி மொக்கு, ரோஜா மொக்கு, நெய், சீயக்காய் பவுடா், நல்லெண்ணெய் என மொத்தம் 15 பொருள்கள் அடங்கியுள்ளன. இதன் விலை ரூ.300.
சிந்தாமணியில் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு வாங்குவோருக்கு இந்த தீபாவளி பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இங்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக பிரபு தெரிவித்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G