தேசிய பஞ்சாலைகளைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
By DIN | Published On : 31st October 2021 12:17 AM | Last Updated : 31st October 2021 12:17 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் சிஐடியூ மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன். உடன் அமைப்பின் நிா்வாகிகள்.
தேசிய பஞ்சாலைகளைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியூ வலியுறுத்தி உள்ளது.
சிஐடியூவின் மாநில நிா்வாக் குழு கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா்.
அகில இந்திய தலைவா் ஹேமலதா, துணைத் தலைவா் ஏ.கே.பத்மநாபன், மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில் நிா்வாகிகள் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை. அனைத்து தொழில் நிறுவனங்களும் கடந்த ஆண்டு வழங்கிய போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைகளைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாலைகளுக்கு தனியாா் முகமை மூலம் ஆள்கள் எடுப்பதை கைவிட்டு நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்றனா்.