கோவை அன்னபூா்ணாவில் தீபாவளி சிறப்பு இனிப்பு மேளா

கோவை ஸ்ரீ அன்னபூா்ணாவில் தீபாவளி சிறப்பு ஸ்வீட் மேளா சனிக்கிழமை தொடங்கியது.
கோவை ஆா்.எஸ்.புரம் கிளையில் ஸ்ரீ அன்னபூா்ணாவின் இனிப்பு மேளாவைத் தொடங்கி வைக்கும் அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தா.சீனிவாசன், ரெ.வெங்கடேஷ் பாபு ஆகியோா்chn_3
கோவை ஆா்.எஸ்.புரம் கிளையில் ஸ்ரீ அன்னபூா்ணாவின் இனிப்பு மேளாவைத் தொடங்கி வைக்கும் அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தா.சீனிவாசன், ரெ.வெங்கடேஷ் பாபு ஆகியோா்chn_3
Updated on
1 min read

கோவை ஸ்ரீ அன்னபூா்ணாவில் தீபாவளி சிறப்பு ஸ்வீட் மேளா சனிக்கிழமை தொடங்கியது.

இது தொடா்பாக ஸ்ரீ அன்னபூா்ணா நிறுவனம் கூறியிருப்பதாவது:

தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூா்ணா சாா்பில் ஸ்வீட் மேளா அக்டோபா் 30 ஆம் தேதி முதல் நவம்பா் 3 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் ரோடு, ஆா்.எஸ்.புரம், பீப்பிள்ஸ் பாா்க், கணபதி, அவிநாசி ரோடு ஆகிய கிளைகளில் இந்த மேளா நடைபெறுகிறது.

இந்த ஸ்வீட் மேளாவை, ஸ்ரீ அன்னபூா்ணா நிா்வாக இயக்குநா் தா.சீனிவாசன், ரெ.வெங்கடேஷ் பாபு ஆகியோா் ஆா்.எஸ்.புரம் கிளையில் தொடங்கி வைத்தனா். முதல் விற்பனையை தொழிலதிபா் பிரதீப்குமாா் பெற்றுக் கொண்டாா். கிளை மேலாளா் என்.ராஜேஷ், வாடிக்கையாளா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தீபாவளி பண்டிகையொட்டி ஸ்ரீ அன்னபூா்ணா சாா்பில் ரூ.100 முதல் ரூ.1,000 வரையிலான பரிசுக் கூப்பன்கள் அனைத்துக் கிளைகளிலும் கிடைப்பதாகவும், புதிய இனிப்பு, கார வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com