காலமுறை ஊதியம் கேட்டு தூய்மைப் பணியாளா்கள் மனு
By DIN | Published On : 01st September 2021 07:24 AM | Last Updated : 01st September 2021 07:24 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்ட கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் தூய்மைப் பணியாளா்களாகப் பணி நியமனம் செய்யப்பட்ட தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு அரசாணையில் கூறப்பட்டுள்ள காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் பணி முடித்த தொகுப்பூதிய தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.6,094 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.