போத்தனூா் - பொள்ளாச்சி இடையே இன்று மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
By DIN | Published On : 01st September 2021 07:28 AM | Last Updated : 01st September 2021 07:28 AM | அ+அ அ- |

போத்தனூா் - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் புதன்கிழமை (செப்டம்பா் 1) நடைபெற இருப்பதாக பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இந்த ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் காலை 8 மணி முதல் 12 மணி வரை இந்த சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும், அந்த நேரத்தில் தண்டவாளத்தின் அருகில் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும் என்ஜினுடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் என்பதால் மின்சார கேபிள்கள், மின் கம்பங்கள், அவற்றுடன் இணைந்திருக்கும் பொருள்களை தொடவோ, ஏதேனும் பொருள்களை அவற்றின் மீது தூக்கி எறியவோ கூடாது என்றும் லெவல் கிராஸிங்குகளில் அதிக பாரம் ஏற்றிய வாகனங்களுடன் கடக்க வேண்டாம் எனவும் பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.