மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கரோனா
By DIN | Published On : 01st September 2021 07:22 AM | Last Updated : 01st September 2021 07:22 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 77ஆக அதிகரித்துள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,266ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 185 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 783 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2,028 போ் சிகிச்சையில் உள்ளனா்.