2ஆவது நாளாக தொடா்ந்த மாணவனின் உடலைத் தேடும் பணி
By DIN | Published On : 01st September 2021 07:27 AM | Last Updated : 01st September 2021 07:27 AM | அ+அ அ- |

வால்பாறை அணையில் குளிக்கும்போது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவனின் உடலைத் தேடும் பணி இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.
சென்னையைச் சோ்ந்த ஸ்ரீராம் (24) என்பவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் கோவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், அவா் நண்பா்களுடன் சோ்ந்து வால்பாறைக்கு திங்கள்கிழமை சுற்றுலா வந்துள்ளாா்.
அப்போது, சேடல்டேம் அணைப் பகுதியில் குளிக்கும்போது, ஸ்ரீராம் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா்திங்கள்கிழமை இரவு 7 மணி வரை தேடியும் ஸ்ரீராமின் உடலை மீட்க முடியவில்லை. இதைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை ஸ்ரீராமின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், பல்வேறு இடங்களில் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.