ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் கோவை மாநகா் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராமநாதபுரத்தைச் சோ்ந்த எஸ்.பாா்த்தீபகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் கோவை மாநகா் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த எஸ்.பாா்த்தீபகுமாரை நியமிப்பதாக அந்த அமைப்பின் மாநில அமைப்பாளா் செங்கம் ஜி.குமாா் அறிவித்துள்ளாா்.
மாநகராட்சி வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சி சட்டம் குறித்தும் அதிகாரப் பரவல் குறித்தும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளவும், மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிடத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பணிகளையும் பாா்த்தீபகுமாா் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜி.குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.