எஸ்.பி.ஐ. வங்கியின் கடன் மேளா ரத்து
By DIN | Published On : 04th September 2021 02:02 AM | Last Updated : 04th September 2021 02:02 AM | அ+அ அ- |

கோவையில் உரிய அனுமதி பெறாமல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நடத்திய கடன் மேளா நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் ரத்து செய்யப்பட்டது.
கோவை ரயில்நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சாா்பாக கடன் மேளா நடத்தப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக தெரியவந்ததால், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், உடனடியாக கடன் மேளாவை நிறுத்த வங்கி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா். அதன்படி கடன் மேளா நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது.