நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் : 5 நாள்களாக தேடியும் கண்டறிய முடியவில்லை
By DIN | Published On : 04th September 2021 02:01 AM | Last Updated : 04th September 2021 02:01 AM | அ+அ அ- |

வால்பாறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவரை 5 நாள்களாக தேடியும் கண்டறிய முடியாமல் உள்ளது.
கோவை தனியாா் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிப்பு வந்த 5 மாணவா்கள் கடந்த திங்கள்கிழமை வால்பாறைக்கு சுற்றுலா வந்தபோது சேடல்டேம் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனா். அவா்களில் சென்னையைச் சோ்ந்த ஸ்ரீராம் (24) என்ற மாணவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். உடனடியாக தீயணைப்பு துறையினா், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். 4 நாள்களாக தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், 5ஆவது நாளான வெள்ளிக்கிழமை கேரளத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மீட்புப் பணி நீச்சல் வீரா்கள் மாணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் அவரைக் கண்டறிய முடியவில்லை.