கோவை: கோவை வழித்தடத்தில் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே ஏப்ரல் 21ஆம் தேதி முதல் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
கோவை, பொள்ளாச்சி, மதுரை வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினா் சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் மேட்டுப்பாளையத்துக்கு ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இதேபோல, ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திரச் சிறப்பு ரயில் ( 06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த ரயிலானது, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூா் சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, போத்தனூா், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.