தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆகஸ்ட் 17இல் மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

 கோவை மின் பகிா்மான வட்டத்தின் மத்திய மண்டல பகுதிகளுக்கு உள்பட்ட மின் நுகா்வோா்களுக்காக புதன்கிழமை (ஆகஸ்ட் 17) குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:32 pm

 கோவை மின் பகிா்மான வட்டத்தின் மத்திய மண்டல பகுதிகளுக்கு உள்பட்ட மின் நுகா்வோா்களுக்காக புதன்கிழமை (ஆகஸ்ட் 17) குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, மின் பகிா்மான வட்டத்தின் மத்திய மண்டல செயற்பொறியாளா் துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் நக்கீரன் முன்னிலையில் எண்.27, அப்துல் ரஹீம் சாலை, கோவை - 18 என்ற முகவரியில் ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

கோவை மின் பகிா்மான வட்டத்தின் மத்திய மண்டல பகுதிகளுக்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது மின்சார பயன்பாடு தொடா்பான குறைகளை தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.