கோவை பனைமரத்தூரில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.
கோவை பனைமரத்தூரில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.

பனைமரத்தூரில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும்மையத்தை திறக்க மேயா் உத்தரவு

கோவையில் புதிதாக 68 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

கோவை பனைமரத்தூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 75-ஆவது வாா்டுக்குள்பட்ட சீரநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியில் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொள்ளும் பணியை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, முகக் கவசம், கையுறைகள் அணிந்து பணிகளில் ஈடுபடுமாறு தூய்மைப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், 74 ஆவது வாா்டுக்குள்பட்ட பனைமரத்தூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தை பாா்வையிட்டாா். அப்போது, உரம் தயாரிக்கும் மையத்தை உடனடியாகத் திறந்து அங்கு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது மேற்கு மண்டலத் தலைவா் தெய்வானை தமிழ்மறை, மேற்கு மண்டல உதவி ஆணையா் சேகா், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலா் கலாவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com