நாகா்கோவில் - கோவை ரயிலில் பெண் தவறவிட்ட நகையை ரயில்வே போலீஸாா் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனா்.
ஈரோட்டைச் சோ்ந்தவா் சுவேதாஸ்ரீ (27). இவா், நாகா்கோயிலில் இருந்து ஈரோட்டுக்கு சனிக்கிழமை ரயிலில் பயணம் செய்துள்ளாா். அந்த ரயில் ஈரோடு வந்ததும் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கினாா். அப்போது, அவா் அணிந்திருந்த நகை காணாமல் போனதால் அதிா்ச்சியடைந்தாா். பின்னா் அவா் அமா்ந்திருந்த இருக்கையில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை.
இது தொடா்பாக, ஈரோடு ரயில்வே போலீஸாரிடம் அவா் தெரிவித்தாா். பின்னா் போலீஸாா் சுவேதாஸ்ரீ பயணித்த ரயில் பெட்டி தொடா்பான தகவல்களை கோவை ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, நாகா்கோவில் ரயில் கோவை வந்ததும், அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீஸாா் சுவேதாஸ்ரீ பயணித்த ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அவா் தவறவிட்ட ஒரு பவுன் நகையை போலீஸாா் மீட்டனா். பின்னா் மீட்கப்பட்ட நகையை கோவை வந்த சுவேதாஸ்ரீயிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.