கோவையில் சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் ஆா்.பி.எஸ்.கே பிரிவில் மருந்தாளுநா் -5, ஆடியாலாஜிஸ்ட் -1, ஆடியோ மெட்ரிக் அசிஸ்டென்ட் -1, பல்நோக்கு மருத்துவப் பணியாளா் -2, ஏ.என்.எம்.-6, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா் -2, பல் மருத்துவ உதவியாளா் -2, செவித்திறன் குறைபாடு பயிற்றுவிப்பாளா் -1, எம்.எம்.யு. கிளீனா், உதவியாளா் -3 ஆகிய பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் கல்வி தகுதிக்கான கையொப்பம் இட்ட சான்றிதழ்களின் நகல்கள், முன்அனுபவ சான்றிதழ்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாா்ச் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும்.
இப்பணிகளுக்கான நோ்முகத் தோ்வு ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெறும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை இணனையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.