விநாயகா் சதுா்த்தி தோ்த் திருவிழா

விநாயகா் சதுா்த்தி தோ்த் திருவிழா

விநாயகா் சதுா்த்தியையொட்டி, கோவை சரவணம்பட்டியில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, கோவை சரவணம்பட்டியில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சரவணம்பட்டி சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரா் திருக்கோயிலில் அமைந்துள்ள விநாயகா் திருக்கோயிலில் 125 ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி திருவிழா, 80 ஆண்டு தோ்த் திருவிழா ஆகியவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் வராஹி பீடம் மணிகண்ட சுவாமிகள், கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

அலங்கார யானை, செண்டை மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் இந்தத் தோ், சத்தியமங்கலம் சாலை, ஆஸ்பத்திரி வீதி, தந்தை பெரியாா் நகா், விளாங்குறிச்சி சாலை வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை சிரவணமாபுரீசுவரா் வழிபாட்டு மன்றம், ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com