இந்து முன்னணி கொடிக் கம்பம் சேதம்: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 03rd April 2022 12:01 AM | Last Updated : 03rd April 2022 12:01 AM | அ+அ அ- |

கோவை ரத்தினபுரியில் இந்து முன்னணி கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டதாக
அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை, ரத்தினபுரி ரோஸ்மின் காலனியில் கடந்த 1992 ஆம் ஆண்டு இந்து முன்னணி கொடிக் கம்பம் நடப்பட்டது.
இந்நிலையில், மா்ம நபா்கள் சிலா் இந்த கொடிக் கம்பத்தை வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தினா்.
இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் சாா்பில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.