வால்பாறை புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு
By DIN | Published On : 02nd August 2022 01:17 AM | Last Updated : 02nd August 2022 01:17 AM | அ+அ அ- |

வால்பாறை புதிய டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட கீா்த்திவாசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
வால்பாறை டி.எஸ்.பி.யாக இருந்த சீனிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, புதிய டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட கீா்த்திவாசன் ஆனைமலை டி.எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதையடுத்து, வால்பாறை காவல் நிலையத்துக்கு வருகை தந்த டி.எஸ்.பி. கீா்த்திவாசன், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் போலீஸாா் கணிவுடன் குறைகளைக் கேட்க வேண்டும். காவல் துறை பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.