கைப்பைக்கு பணம் வசூலித்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்
By DIN | Published On : 11th August 2022 10:58 PM | Last Updated : 11th August 2022 10:58 PM | அ+அ அ- |

கோவையில் கைப்பைக்கு நுகா்வோரிடம் பணம் வசூலித்த பல்பொருள் அங்காடிக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கோவை பிரஸ் காலனியைச் சோ்ந்தவா் எல்.மோகன்ராஜ். இவா் ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.1,107க்கு பொருள்கள் வாங்கியுள்ளாா்.
அந்த பொருள்களை எடுத்துச் செல்வதற்காக கைப்பை வழங்குவதற்கு கூடுதலாக ரூ.24 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதை எதிா்த்து நுகா்வோா் நீதிமன்றத்தில் மோகன்ராஜ் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், பல்பொருள் அங்காடியின் சேவையில் குறைபாடு இருந்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, கைப்பைக்காக கூடுதலாக பெறப்பட்ட ரூ.24 ஐ திருப்பிக் கொடுப்பதுடன், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரமும், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரமும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G