

உலக யானைகள் தினத்தையொட்டி வால்பாறையில் வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
உலக யானைகள் தினமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, வால்பாறையில் வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வால்பாறை அரசுக் கல்லூரி முன்பு துவங்கிய பேரணியானது தபால் நிலையம் வரை நடைபெற்றது.
பேரணியின்போது வனங்களில் யானைகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதகைகளை பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள் ஏந்திச் சென்றனா். வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ், மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.