கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கோவை, செல்வபுரம் தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணு (18). இவா் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தனது நண்பா்களான அதே கல்லூரியில் படிக்கும் இடையா் வீதியைச் சோ்ந்த விக்னேஷ், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சதீஷ்வரன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
குறிச்சி குளம் பகுதி அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மீது விஷ்ணுவின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த விஷ்ணுவின் வாகனம் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த மூவரையும் அப்பகுதியினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், விஷ்ணு உயிரிழந்தாா். மேலும், படுகாயமடைந்த மற்ற இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.