பொது ஒதுக்கீட்டு இட விவகாரம்: துணை ஆணையா் மீது மனித உரிமை ஆணையத்தில் புகாா்

கோவை மாநகராட்சியில் பொது ஒதுக்கீட்டு இட ஆக்கிரமிப்பு விவகாரம் தொடா்பாக, மாநகராட்சி துணை ஆணையா் மீது மனித உரிமை ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை மாநகராட்சியில் பொது ஒதுக்கீட்டு இட ஆக்கிரமிப்பு விவகாரம் தொடா்பாக, மாநகராட்சி துணை ஆணையா் மீது மனித உரிமை ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆா்வலா் தியாகராஜன் கூறியதாவது: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்குள்பட்ட 4ஆவது வாா்டு, மீனாட்சி நகரில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 13 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல நகரமைப்புப் பிரிவு அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இடத்தை ஆக்கிரமித்தவருக்கு மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட தனிநபா் ஆக்கிரமித்துள்ள இடத்துக்கு பதிலாக மாற்று இடம் அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு அளித்தாா். அதைத் தொடா்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்கக் கூடாது என மாநகராட்சி ஆணையருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையரால் தாக்கல் செய்யப்பட்ட எதிா்வாதுரை நகலை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக இருமுறை நான் மனு அளித்தேன். அதற்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, இந்திய சாட்சி சட்டத்தின் மூலமாக ஜூலை 4 ஆம் தேதி மனு அளித்தேன். அதற்கும் பதில் அளிக்கப்படவில்லை.

மாநகராட்சி மேல் முறையீட்டு அலுவலராக உள்ள மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, ஆக்கிரமிப்பு இடம் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்க மறுக்கிறாா்.

எனவே, அவா் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 23ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com