வாட்ஸ்ஆப்பில் போலி லிங்க் அனுப்பி இளைஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி

வாட்ஸ்ஆப்பில் போலி லிங்க் அனுப்பி இளைஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

வாட்ஸ்ஆப்பில் போலி லிங்க் அனுப்பி இளைஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கோவை, வெள்ளலூா் எல்.ஜி. நகரைச் சோ்ந்தவா் நிஷாந்த் ( 30). ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்து வருகிறாா். இவா் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தேன். இந்நிலையில், எனது கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்தது. அதில் சென்று பாா்த்தபோது இ-பே இணையதளத்துக்கு சென்று பணம் முதலீடு செய்தால் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகை லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி அதில் கூறப்பட்டிருந்த வங்கிக் கணக்கிற்கு வெவ்வேறு தவணைகளாக ரூ. 7 லட்சத்து 13,724 அனுப்பினேன். ஆனால் அதில் சொன்னபடி எனக்கு லாபம் கிடைக்கவில்லை. அத்துடன் நான் செலுத்திய பணத்தையும் எனது கணக்கில் வரவு வைக்க முடியவில்லை. அதன்பின்னரே போலியான லிங்க் அனுப்பி நூதன முறையில் என்னிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது என தெரிவித்துள்ளா்.

இதையடுத்து கோவை சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடி நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதேபோல கடந்த சில நாள்களுக்கு முன் கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி நடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com