கோவை, ஒண்டிப்புதூரில் சாலையில் நடந்து சென்ற செவிலியரிடம் 11 பவுன் நகையை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை மாவட்டம், இருகூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜிதா (39). இவா், கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஒண்டிப்புதூா் பாலம் அருகே சனிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், அஜிதா அணிந்திருந்த 11 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இது குறித்து, அஜிதா அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.