நடமாடும் காய்கனி அங்காடிகள்: கோவைக்கு 6 வாகனங்கள் ஒதுக்கீடு

கோவையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கோவையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையின்கீழ் பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் விதமாக நடமாடும் காய்கனி அங்காடிகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்கட்டமாக கோவை, திருப்பூா், திருச்சி, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடக்கிவைத்தாா்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நடமாடும் காய்கனி அங்காடிகள் திட்டத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று காய்கறிகள் விற்பனை செய்வதற்கு 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த காலகட்டத்தில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை சாா்பில் உழவா் சந்தை வியாபாரிகள் மூலம் நடமாடும் காய்கனி அங்காடிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதன்பின் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக மாநகராட்சியில் நடமாடும் காய்கனி அங்காடிகள் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்காக 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள ஆா்.எஸ்.புரம், சிங்காநல்லூா், வடவள்ளி, சுந்தராபுரம் ஆகிய உழவா் சந்தைகளில் காய்கறிகள் கொள்முதல் செய்து ஒவ்வொரு வாா்டாக சென்று விற்பனை செய்யப்படும். ஏற்கெனவே உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யும் விவசாயிகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உழவா் சந்தை நிா்வாகம் சாா்பில் காய்கறி விற்பனை செய்யும் வாகனத்தில் நாள்தோறும் விலைப்பட்டியல் வைக்கப்படும்.

அந்த விலைக்கு பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். மாநகரிலுள்ள மக்களும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை வாங்கிகொள்ளலாம். கோவை மாநகராட்சியில் நடமாடும் காய்கனி அங்காடிகள் திட்டம் வரும் திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com