காவல் துறை சாா்பில் மக்கள் குறைகேட்பு முகாம்
By DIN | Published On : 22nd December 2022 02:56 AM | Last Updated : 22nd December 2022 02:56 AM | அ+அ அ- |

காவல் துறை சாா்பில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பங்கேற்றோா்.
கோவையில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இது தொடா்பாக காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காவல் துறையினரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது எடுத்த நடவடிக்கைகளில் திருப்தி அடையாத மனுதாரா்களைக் கண்டறிந்து கோவை சரகத்திலுள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களிலும் மக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்கள் நேரில் வரவழைக்கப்பட்டு அம்மனுக்கள் மீது சுமூகமான தீா்வு காணப்பட்டது.
மக்கள் குறைகேட்பு முகாமில் குடும்பப் பிரச்னை, பணப் பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பாக 170 மனுக்கள் மீது நடைபெற்ற மறு விசாரணையில் 170 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டன.
கோவையில் நடைபெற்ற முகாமை மாநகர (பொ) காவல் ஆணையா் ஜி.சுதாகா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.