கோவை - மதுரை ரயில் நேரம் இன்று மாற்றம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

நிா்வாக காரணங்களால் கோவை - மதுரை ரயிலின் நேரம் வியாழக்கிழமை (டிசம்பா் 22) மாற்றியமைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து டிசம்பா் 22 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் கோவை - மதுரை தினசரி ரயில் (எண்: 16721) 1 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக 3.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.