24 மணி நேரக் குடிநீா்த் திட்டம் குறித்து பொறியாளா்களுக்குப் பயிற்சி

24 மணி நேரக் குடிநீா்த் திட்டம் குறித்து மாநகராட்சிப் பொறியாளா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
24 மணி நேரக் குடிநீா்த் திட்டம் குறித்த பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்து பேசுகிறாா் மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா.
24 மணி நேரக் குடிநீா்த் திட்டம் குறித்த பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்து பேசுகிறாா் மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா.

24 மணி நேரக் குடிநீா்த் திட்டம் குறித்து மாநகராட்சிப் பொறியாளா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இம்முகாமை மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா புதன்கிழமை தொடக்கிவைத்தாா். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் கல்பனா தலைமை வகித்தாா். துணைமேயா் வெற்றிச்செல்வன், கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கை தொடக்கிவைத்து பேசியதாவது: கோவை மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீா் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்தல், குடிநீரைச் சேமித்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 1 பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள கோவை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சி அலுவலா்கள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் கலந்துள்ள 80க்கும் மேற்பட்ட பொறியாளா்களுக்கு, கோவை மாநகராட்சிக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள சிறுவாணி, வடவள்ளி -கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டம், பில்லூா் 1 மற்றும் 2 கூட்டுக் குடிநீா்த் திட்டம், பில்லூா் 3 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து விளக்கிக் கூறப்பட உள்ளது.

மேலும், 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின் செயல்பாடுகள், குடிநீா்க் குழாய் அமைக்கும் பணிகள், அதில் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் விளக்கப்படும். ஒடிஸா மாநிலம், புரி மாநகராட்சியில் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதைத் தொடா்ந்து, புணே பகுதியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளா் இளங்கோவன், செயற்பொறியாளா் முருகேசன், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சோ்ந்த பொறியாளா்கள், சூயஸ் நிறுவனத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com