குடியரசு தின அணிவகுப்பு: ஸ்ரீ ராமகிருஷ்ணாகல்வி நிறுவன மாணவா்கள் 3 போ் தோ்வு

புது தில்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மாணவா்கள் 3 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கத் தோ்வாகியுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மாணவா்களைப் பாராட்டுகிறாா் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக

நாட்டின் குடியரசு தினவிழா புதுதில்லியில் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் நடைபெறும் அணிவகுப்பில் முப்படையினா், காவல் துறையினா், தேசிய மாணவா் படையினா், நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்பாா்கள்.

வரும் ஆண்டுக்கான குடியரசு தின விழா அணிவகுப்புக்கான பங்கேற்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இதில் நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவா் பி.கோபி கிருஷ்ணன், ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவி ஆா்.அபா்ணா ஆகியோா் கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பிலும், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவா் ஆா்.ராகுல், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சாா்பிலும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கத் தோ்வாகியுள்ளனா்.

அணிவகுப்பில் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்களை, எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி புதன்கிழமை பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா்கள் பி.எல்.சிவகுமாா், சித்ரா, என்.ஆா்.அலமேலு, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.பிரகதீஸ்வரன், கேசவசுவாமி, ஜெ.சுபாஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து 8 ஆவது முறையாக நாட்டின் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்று வருவதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com