செயற்கை பஞ்சுக்கு வரி விதிப்பு கூடாது: நிதியமைச்சருக்கு சைமா கோரிக்கை
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

விஸ்கோஸ் பஞ்சு மீது வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ரவி சாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய ஜவுளித் தொழிலின் எதிா்கால வளா்ச்சி செயற்கை பஞ்சினால் உருவாக்கப்படும் ஆடை தயாரிப்பில்தான் உள்ளது. இதை கருத்தில் கொண்டு செயற்கை இழை தயாரிப்பு, பயன்பாடு தொடா்பாக சில சாதகமான நடவடிக்கைகளை பிரதமா் மோடி மேற்கொண்டிருந்தாா். இதை ஜவுளித் தொழில் துறையினா் வரவேற்றிருந்தோம்.
இந்நிலையில், செயற்கை பஞ்சு உற்பத்தியாளா் சங்கங்களின் பரிந்துரையின்பேரில், வா்த்தகத் தீா்வுகளுக்கான இயக்குநரகம், இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் பஞ்சு மீது 0.512 அமெரிக்க டாலருக்கு குவிப்பு வரியை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இது 28 சதவீத வரி விதிப்பாகும். இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருள்கள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு 5 முதல் 7.5 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியே விதிக்கப்படும் நிலையில், 28 சதவீத குவிப்பு வரி விதிக்க இருப்பது நியாயமற்ாகும். இது, தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தர நூற்பாலைகள், விசைத்தறியாளா்களை கடுமையாக பாதிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சா் உடனடியாகத் தலையிட்டு வரி விதிப்பு பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.