புகாா் தெரிவித்த ஒரே நாளில் பழுதடைந்த 5 மின் கம்பங்கள் மாற்றம்
By DIN | Published On : 22nd December 2022 02:55 AM | Last Updated : 22nd December 2022 02:55 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டில் சிதிலமடைந்த, சாயும் நிலையில் காணப்பட்ட 5 மின் கம்பங்களை புகாா் அளித்த ஒரே நாளில் மின் வாரிய ஊழியா்கள் மாற்றினா்.
கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டுக்குள்பட்ட கருப்பண்ண கவுண்டா் லே- அவுட், செங்காளியப்பன் நகா் பகுதிகளில் 5 மின் கம்பங்கள் சிதிலமடைந்து, சாயும் நிலையில் காணப்பட்டன.
இது தொடா்பாக, அந்த வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரியிடம் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் சித்ரா புகாா் அளித்தாா்.
இதையடுத்து, 24 மணி நேரத்துக்குள் சிதிலமடைந்த , சாயும் நிலையில் இருந்த மின் கம்பங்களை மின் வாரிய மாற்றியமைத்தனா்.
உடனடி நடவடிக்கை மேற்கொண்ட பீளமேடு தண்ணீா்பந்தல் மின்வாரிய ஊழியா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.