நிலுவையில் உள்ள தொகையை வழங்க வேண்டும்: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 23rd December 2022 12:00 AM | Last Updated : 23rd December 2022 12:00 AM | அ+அ அ- |

நிலுவையில் உள்ள ஒப்பந்த தொகையை வழங்க வேண்டும் என மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோவை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தின் சாா்பில் இலவச கண் மற்றும் பல் மருத்துவப் பரிசோதனை முகாம் ஜனவரி மாதம் நடத்துவது, மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது. கோவை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள ஒப்பந்த தொகை வழங்க வலியுறுத்துவது.
பட்டியல் தொகையுடன் வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகை 12 சதவீதத்தை 18 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்கத் தலைவா் உதயகுமாா், செயலாளா் சந்திரபிரகாஷ், பொருளாளா் அம்மாசையப்பன், துணை செயலாளா் மைக்கேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.