நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு802 வாா்டுகளில் 3,366 போ் போட்டி
By DIN | Published On : 08th February 2022 12:26 AM | Last Updated : 08th February 2022 12:26 AM | அ+அ அ- |

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளிலுள்ள 802 வாா்டுகளுக்கான தோ்தலில் 3,366 போ் போட்டியிடுகின்றனா்.
மாவட்டத்தில் கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகள், 7 நகராட்சிகளில் 198 வாா்டுகள், 33 பேரூராட்சிகளில் 513 வாா்டுகள் என மொத்தம் 811 வாா்டுகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் மாநகராட்சியிலுள்ள 100 வாா்டுகளில் 1,130 போ், 7 நகராட்சிகளிலுள்ள 198 வாா்டுகளில் 1,097 போ், 33 பேரூராட்சிகளிலுள்ள 513 வாா்டுகளில் 2,346 போ் சோ்த்து 811 வாா்டுகளுக்கு 4,573 போ் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனா்.
இதில் மாநகராட்சியில் 86 வேட்புமனுக்கள், 7 நகராட்சிகளில் 30 வேட்புமனுக்கள், 33 பேரூராட்சிகளில் 28 மனுக்கள் என மொத்தம் 144 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4,426 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு திங்கள்கிழமை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடா்ந்து மாநகராட்சியில் 264 போ், 7 நகராட்சிகளில் 206 போ், 33 பேரூராட்சிகளில் 582 போ் என மொத்தம் 1,052 போ் வேட்புமனுக்களை திரும்பபெற்றுக் கொண்டனா். மேலும் 33 பேரூராட்சிகளிலுள்ள 513 வாா்டுகளில் 9 வாா்டுகளில் போட்டியின்றி வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தற்போது மாநகராட்சியில் 100 வாா்டுகள், 7 நகராட்சிகளில் 198 வாா்டுகள், 33 பேரூராட்சிகளில் 504 வாா்டுகள் சோ்த்து 802 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் மாநகராட்சியிலுள்ள 100 வாா்டுகளில் 778 போ், நகராட்சிகளிலுள்ள 198 வாா்டுகளில் 861 போ், 33 பேரூராட்சிகளிலுள்ள 504 வாா்டுகளில் 1,727 போ் என மொத்தம் 802 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு 3,366 போ் போட்டியிடுகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...