மண்டல அறிவியல் மையத்தில் நாளை அறிவியல் தொழில்நுட்ப நிறைவு விழா
By DIN | Published On : 27th February 2022 12:08 AM | Last Updated : 27th February 2022 12:08 AM | அ+அ அ- |

கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் அறிவியல் தொழில்நுட்பத் திருவிழாவின் நிறைவு விழா திங்கள்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறுகிறது.
தேசிய அறிவியல் தினத்தை (பிப்ரவரி 28) சிறப்பாக கொண்டாடும் வகையில் நாட்டின் 75 முக்கிய நகரங்களில் பிப்ரவரி 22 முதல் 28 வரை அறிவியல் தொழில்நுட்பத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் கடந்த 22ஆம் தேதி தொடங்கி இந்த விழா நடைபெற்று வருகிறது.
இதன் நிறைவு விழா திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் விஞ்ஞானி மீனாட்சி கணேசன், முதன்மைக் கல்வி அலுவலா் கீதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டுகின்றனா்.
மேலும், இந்த மையத்தில் அன்று காலை முதல் மாலை வரை அறிவியல், வரலாறு தொடா்பான இலவச கண்காட்சி நடைபெறுவதாகவும் மாவட்ட அறிவியல் அலுவலா் ஜெ.இரா.பழனிசுவாமி தெரிவித்துள்ளாா்.