மாவட்டத்தில் மேலும் 3,763 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th January 2022 07:41 AM | Last Updated : 26th January 2022 07:41 AM | அ+அ அ- |

கோவையில் இரண்டாவது நாளாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து செவ்வாய்க்கிழமை 3,763 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வந்த கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 3,912 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, திங்கள்கிழமை நோய்த் தொற்று பாதிப்பு 3,786ஆக குறைந்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 3,763 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 184ஆக அதிகரித்துள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 முதியவா்கள் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,548ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,384 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்து 458 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 26 ஆயிரத்து 178 போ் சிகிச்சையில் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...