

கோவையில் தேவாலய சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்தை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கோவை, ராமநாதபுரம் சந்திப்பு பகுதியில் ட்ரினிட்டி தேவாலயம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இதன் வாயிலில் புனித செபாஸ்தியா் சிலை அமைந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா் சிலையை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி தேவாலயத்தையும், சேதப்படுத்தப்பட்ட சிலையையும் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
பின்னா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தேவாலய நிா்வாகிகளிடம் உறுதியளித்தாா். அதிமுக எம்.எல்.ஏக்கள் வி.பி.கந்தசாமி, அம்மன் கே.அா்ச்சுனன், தாமோதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.